ஒருநாள் போட்டிகளில் 49 ஆவது சதம் – பிறந்தநாளில் சச்சினின் சாதனையை சமன் செய்தார் விராட் கோலி

Share

தனது பிறந்தநாளான இன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 49ஆவது சதத்தை பதிவுசெய்த விராட் கோலி, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை சமன் செய்துள்ளார்.

நடப்பு உலகக்கிண்ண தொடரில் தென்னாபிரிக்க அணிக்கு எதிராக விராட் கோலி ஆட்டமிழக்காது 101 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இதன்மூலம் அவர் 289 ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்துள்ளார்.

கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இந்த போட்டி இடம்பெறுகின்றது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இந்திய அணி 50 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 326 ஓட்டங்களை பெற்றிருந்தது.

விராட் கோலி சதம் அடித்திருந்தார். ஷ்ரேயாஸ் ஐயர் 77 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 40 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

சச்சின் டெண்டுல்கர் 463 போட்டிகளில் 49 சதங்களை அடித்துள்ளார். எனினும், விராட் கோலி 289 போட்டிகளில் சச்சினின் சாதனையை சமன் செய்துள்ளார்.

சச்சினுடன் ஒப்பிடுகையில் விராட் கோலி 174 குறைவான போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு