“இந்தியாவில் தற்போது ஐ.பி.எல்.போட்டி நடைபெற்று வருகின்றது. இதில் சச்சின் டெண்டுல்கரின் மகனும் விளையாடுகின்றார். ஆனால், அவர் சச்சின் போல் பிரகாசிக்கவில்லை. சச்சின் டெண்டுல்கரின் மகன் என்பதற்காக அவரால் சச்சின் ஆகிவிட முடியாது. அதேபோலவே அந்த ஜனாதிபதி (ரணசிங்க பிரேமதாஸ) சிறப்பாகச் செயற்பட்டார் என்பதற்காக அவரின் மகனால் (சஜித் பிரேமதாஸ) சிறப்பாகச் செயற்பட முடியாது.”
– இவ்வாறு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் இன்றைய மே தினக் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அத்துடன், சஜித் பிரேமதாஸ மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் மீது சரமாரியான சொற்கணைகளையும் அவர் நேரடியாகத் தொடுத்தார்.