சந்தேக நபர்களை தேடி பொலிசார் வலைவீச்சு!

Share

முள்ளியவளை கணுக்கேணி பகுதியில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ள சம்பவம் ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை கணுக்கேணியில் போதைப்பொருள் தொடர்பாக நேற்று (18.11.2023) இரவு 9 மணியளவில் இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போது சந்தேக நபர்கள் போதைப் பொருள்களை போட்டுவிட்டு
தப்பி ஓடி உள்ளார்கள்.

குறித்த இடத்திலிருந்து சிறு சிறு பொதி செய்யப்பட்ட வகையில் 4 கட்டு ஹெரோயினுடன் 10 மில்லி கிராமும் , 4 கிராம் குடு போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள போதை பொருட்கள் முள்ளியவளை பொலிஸில் ஒப்படைக்கப்ப ட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை பொலிஸார் தேடி வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் முல்லைத்தீவு நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு