இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் புவியியற்துறை முதுநிலை விரிவுரையாளரான நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்தார்.
தற்போதைய காலநிலை மாற்றம் தொடர்பாக கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்.
வட கிழக்கில் இன்று தொடக்கம் எதிர்வரும் 21வரை மழை பெய்யும் வாய்ப்பு இருப்பதாக வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீரற்ற காலநிலையினால் தொடர்ச்சியாக மழை கிடைக்கப்பெற்று வருகின்றது. இம் மழை இன்னும் சில தினங்களுக்கு தொடர்ச்சியாக இருக்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றது.
இன்றையதினம் சனிக்கிழமை காலை 7 மணியளவில் இலங்கையின் முல்லைத்தீவுக்கு தெற்காக காற்று சுழற்சி ஒன்று உருவாகியுள்ளது. இதன் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 21.11.2023 வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் மிதமானது முதல் கனமானது வரை மழை கிடைக்கும் வாய்ப்புள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.