ஹமாஸுக்கு எதிரான போரை நிறுத்த மாட்டோம்; பயங்கரவாதிகளிடம் சரணடைய தயாரில்லை; இஸ்ரேல் அறிவிப்பு

Share

”போரை நிறுத்தினால் ஹமாஸிடம் சரண் அடைவதற்குச் சமம். போரை நிறுத்துவதற்கு இனி வாய்ப்புகள் இல்லை” என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தனியாகு தெரிவித்துள்ளதார்.

வெளிநாட்டு ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,

ஹமாஸ் போராளிகள் ஏறக்குறைய 1,400 பேரை கொன்றுவிட்டு 230க்கும் மேற்பட்டோரை பிணைப்பிடித்து சென்றுள்ளனர்.

போரை நிறுத்த வேண்டும் என்று அழைப்பு விடுப்பது, பயங்கரவாதிகளிடம் சரண் அடைவது போன்றதாகும். அது நடக்காது. இதில் வெற்றி பெறும் வரை இஸ்ரேல் ஓயாது” என தெரிவித்துள்ளார்.

காஸாக்குள் நுழைந்து இஸ்ரேலிய படைகள் போரிட்டு வருகின்றன. ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களை முற்றுகையிட்டு இஸ்ரேல் குண்டுகளை சரமாரியாக வீசி வருகிறது.

இஸ்ரேலிய வரலாற்றில் இதுவரை இல்லாத தாக்குதலை அது நடத்தி வருகிறது.

கடந்த ஒக்டோபர் 7ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் 5,000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் மீது பாய்ச்சியதில் பல நூறு இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.

இதற்கு பதிலடியாக இஸ்ரேல் விடாமல் தாக்கி வருகிறது. இதில் ஆயிரக்கணக்கான காஸா மக்கள் கொல்லப்பட்டனர்.

இஸ்ரேலின் தீவிர தாக்குதலால் காஸா வட்டாரத்தில் வாழும் 2.4 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அங்கு 8,300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்று ஹமாஸ் சுகாதார அமைச்சு கூறியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு