கேரளாவில் குடும்பமொன்று தற்கொலை; இலங்கை இணையவழி கும்பலே காரணம்

Share

இந்தியாவின் கேரளாவில் குடும்பமொன்று தற்கொலை செய்துகொண்டமைக்கு இலங்கையை சேர்ந்த இணையவழி கடன்வழங்கும் கும்பலே காரணம் என்பது விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

கேரளா மாநிலத்தில் கடமக்குடி பகுதியில் ஒரேகுடும்பத்தை சேர்ந்த நால்வர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட அந்த மாநில பொலிஸார் இலங்கையை சேர்ந்த, உடனடி கடன்வழங்கும் குற்றவாளிகள் வலையமைப்பே இந்த தற்கொலைக்கு காரணம் என கண்டுபிடித்துள்ளனர்.

நிஜோ ஜொனி அவரது மனைவி இரண்டு குழந்தைகள் செப்டம்பர் 12ம் திகதி அவர்களின் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். இவர்களின் தற்கொலை குறித்து விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டவேளை உயிரிழந்தவர்களின் உறவினர் ஒருவருக்கு ஆபாச படங்கள் அனுப்பப்பட்டமை தெரியவந்துள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கேரள பொலிஸார் ஆரம்பித்த வேளை பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.

இந்த விசாரணைகளின் போது ஜொனியின் மனைவி சில்பா கடன் வழங்கும் நிறுவனங்களிடமிருந்து கடன்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது ஆனால் அவரால் அதனை திருப்பி செலுத்த முடியாத நிலை காணப்பட்டுள்ளது என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சில்பாவினால் கடனை திருப்பமுடியதா நிலையேற்பட்டவுடன் கடன் வழங்கிய நிறுவனங்கள் பாதிக்கப்பட்டவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆபாச படங்களை அனுப்ப ஆரம்பித்துள்ளனர் அந்தப் படங்கள் எங்கிருந்து வந்தன என்பதை நாங்கள் ஆராய்ந்த வேளை அது இலங்கையிலிருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடன்வழங்கியவர்கள் அங்கிருந்து செயற்பட்டிருக்கலாம் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

முதலில் இது வடஇந்தியாவை சேர்ந்தவர்கள் என பொலிஸார் சந்தேகித்துள்ளனர் வடஇந்தியாவில் இவ்வாறான குற்றச்செயல்கள் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

எனினும் பாதிக்கப்பட்டவர்கள் உரையாடிய வட்ஸ் அப் இலக்கங்கள் வேறு விடயத்தை தெரிவித்துள்ளன.

இலங்கையை சேர்ந்த குற்றவாளிகள் இதில் தொடர்புபட்டுள்ளனரா என்பதை உறுதி செய்வதற்காக நாங்கள் மேலும் விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு