இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு  – தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்

Share

இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

இந்தியா முழுவதும் கடந்த சில வாரங்களாகக் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது. இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,692 பேருக்குக் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 28 பேர் உயிரிழந்து இருந்தனர். தமிழகத்திலும் நேற்று 534 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டு இருந்தது. கேரளா, மகராஷ்டிரா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இந்தநிலையில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களைச் சுட்டிக்காட்டி இந்திய மத்திய சுகாதாரத்துறை அறிவுரைகளுடன் கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மொத்தம் 8 மாநிலங்களுக்குக் கடிதம் எழுதியுள்ளார். டில்லி, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மகராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட 8 மாநிலங்களுக்கு ராஜேஷ் பூஷன் தனித்தனியே கடிதம் எழுதியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு