40000 ஆயிரம் ஆசிரியர்களுக்கு வெற்றிடம் – ஜோசப் ஸ்டாலின்

Share

நாட்டில் உள்ள பாடசாலைகளில் மொத்தமாக 40,000 ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

மேல் மற்றும் கிழக்கு, வடமத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவித்தார்.

இதன்படி, மேல் மாகாணத்தில் ஏறக்குறைய 7,000 ஆசிரியர் பற்றாக்குறை காணப்படுகிறது ; கிழக்கு மாகாணத்தில் கிட்டத்தட்ட 3,800 வெற்றிடங்களும், வடமத்திய மாகாணத்தில் 3,698 வெற்றிடங்களும், பதிவாகியுள்ளன.

தென் மாகாணத்தில் 3,100 வெற்றிடங்களும், பதிவாகியுள்ளன; மற்றும் மத்திய மாகாணத்தில் கிட்டத்தட்ட 6,200 வெற்றிடங்களும், பதிவாகியுள்ளன.

அரசு செலவினங்களை கட்டுப்படுத்த ஆசிரியர் நியமனத்தை அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துகிறது என ஸ்டாலின் கூறினார்.

“தற்போது உள்ள ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்பா விட்டால் இப்பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் நெருக்கடியான சூழ்நிலை ஏற்படும்.

“இருப்பினும், அரசாங்கம் மேல் மாகாணத்திற்கு 2,500 ஆசிரியர்களை இரண்டு முறை பணியமர்த்தியது, ஆனால் அவர்கள் முறையாக ஆட்சேர்ப்பு செய்யபடவில்லை.

எனவே, தற்போதுள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு உரிய முறையில் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு