வெயில் காலத்தில் கவனிக்க வேண்டியவை

Share

கோடை கால வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பலர் வெப்ப அலையால் அவதியுற்று வருகின்றனர்.

வெயில் காலங்களில் வெளியே சுற்றித்திரிவதால் உடலில் நீர்ச்சத்து வெகுவாக இழக்கப்படுகிறது. அதற்கு ஈடான நீர்ச்சத்தை மீண்டும் பெறாவிட்டால் பல்வேறு உடல்நல பிரச்சினைகளை ஏற்படுத்திவிடுகிறது.

வெயில் காலங்களில் முக்கியமாக பலரும் எதிர்கொள்ளும் பிரச்சினை சிறுநீர் பாதை தொற்று. நீர்ச்சத்து குறைவதால் சிறுநீரகம் கழிவுகளை வெளியேற்ற நீர்ச்சத்து போதாமையால் கிருமிகளின் தாக்கத்திற்கு உள்ளாகிறது.

இதனால் சிறுநீர் பாதையில் கடும் எரிச்சல் ஏற்படுகின்றன. இதை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டால் சிறுநீரக கல் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த சிறுநீர்பாதை தொற்று பெண்களுக்கு அதிக அளவில் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுபோன்ற கிருமி தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்க தினசரி 3 முதல் 4 லிட்டர் வரை தண்ணீர் அருந்த வேண்டும்.

வெயில் காலங்களில் காரமான உணவுகளை பெரும்பாலும் தவிர்ப்பது நல்லது. காலையில் நீராகாரம், இளநீர், நீர் மோர் போன்றவற்றை பருகுவது உடலின் நீர்ச்சத்து இழப்பை ஈடு செய்ய உதவும்.

சிலருக்கு வெயில் காலங்களில் அதிகமாக வியர்வை உண்டாகும். அவர்கள் வியர்வையோடு குளிப்பது, குளிர்பானங்களை அருந்துவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

வெயில் நேரத்தில் குழந்தைகளை வெயிலில் வெளியே விளையாட விடாமல் மாலை நேரங்களில் விளையாட அனுமதிக்கலாம் என டாக்டர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு