கல்முனை தமிழ் பிரதேச செயலகம் முன்பாக கறுப்பு சித்திரை போராட்டம்

Share

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாக ரீதியான பிரச்சினைகளை வென்றெடுப்பதற்காக குறித்த போராட்டமானது இன்று (14.04.2024) கறுப்பு சித்திரை என்ற பெயருடன் மேற்கொள்ளப்பட்டது.

தொடர்ந்தேட்சியாக 21 ஆவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் பிரதே செயலகத்தின் முன்பாக போராட்டக்காரர்களால் கறுப்பு பொங்கல் பொங்கப்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிள் பவணி ஒன்று இளைஞர் கழகங்கள், விளையாட்டு கழகங்கள் மற்றும் பொதுமக்களின் பங்களிப்புடன் கறுப்பு கொடி ஏந்தப்பட்டு பிரதேச செயலக முன்றலில் இருந்து ஆரம்பமாகி மணல்சேனை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு, துரைவந்திய மேடு, துறைநீலாவணை, பெரிய நீலாவணை, மருதமுனை, பாண்டிருப்பு, கல்முனை நகரப்பகுதி ஊடாக சென்று மீண்டும் பிரதேச செயலக முன்றல் நோக்கி வந்தடைந்ததுடன் பல்வேறு கோஷங்களுடன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அங்கு வருகை தந்த கல்முனை தலைமையக பொலிஸார் நீதிமன்ற கட்டளைப்படி பொதுமக்களின் போக்குவரத்து மற்றும் பொதுச்சொத்துக்கள் சேதமாக்குதல் போன்ற செயற்பாடுகளுக்காக போராட்டக்காரர்கள் என மூவரின் பெயரை குறிப்பிட்டு அப்பகுதியில் கடிதம் ஒன்றினை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு