தேர்தலைப் பிற்போட இனியும் இடமளிக்க மாட்டோம்; ரணிலின் அறிவிப்பின் பிரகாரம் தேர்தல் நடைபெறுவது உறுதி

Share

உரிய காலத்தில் தேசிய தேர்தல்கள் நடைபெற வேண்டும். இனிமேல் எந்தத் தேர்தலையும் பிற்போட இடமளிக்கமாட்டோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுநரும், முன்னாள் அமைச்சருமான பஸில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளதன் பிரகாரம் ஜனாதிபதித் தேர்தலும், நாடாளுமன்றத் தேர்தலும் அடுத்த வருடம் நடைபெற வேண்டும்.

தேர்தலைப் பிற்போட்டு அதில் அரசியல் நடத்த எவருக்கும் இடமளிக்கமாட்டோம்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தேர்தல்களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றது. தேர்தல்களுக்கு அஞ்சும் கட்சி எமது கட்சி அல்ல” எனவும் அவர் கூறியுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல் உறுதியாக நடைபெறும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஐ.தே.கவின் தேசிய மாநாட்டில் கூறியிருந்தார்.

என்றாலும், நாடாளுமன்றத் தேர்தலை மறுசீரமைப்புக்கு யோசனையொன்றை அண்மையில் நீதி அமைச்சர் விஜேதாஸ ராஜபக்ஷ, அமைச்சரவைக்கு முன்மொழிந்திருந்ததுடன், அதற்கு அமைச்சரவை அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றது.

தேர்தல்முறையை மறுசீரமைக்கும் யோசனைகளை முன்மொழிய விசேட குழுவொன்று ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

நாடாளுமன்றத் தேர்தல் முறையை மறுசீரமைக்கிறோம் என்ற போர்வையில் ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதே அரசாங்கத்தின் நோக்கமாக உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு