இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
அவரது இந்த விஜயத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களையும் சந்திக்க உள்ளார்.
ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தின் உயர்மட்ட தலைவர்களுடனான சந்திப்புகள் இன்று இடம்பெறவுள்ளன.
அதேபோன்று திருகோணமலைக்கு விஜயம் செய்யும் இந்திய நிதி அமைச்சர் அங்கு State Bank of India வின் கிளையொன்றையும் திறந்துவைக்கவுள்ளார்.
நாளைய தினம் கொழும்பில் அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ‘மலையகம் 200’ நிகழ்விலும் அவர் பங்கேற்க உள்ளார்.