ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை கலைப்பதற்காக பொலிஸார் இன்று கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் நடத்தியுள்ளனர்.
ஹோமாகம வைத்தியசாலை தொடர்பான அமைச்சரவை தீர்மானத்திற்கு எதிர்ப்புத்தெரிவிக்கும் வகையில் பல்கலைக்கழக மாணவர்கள் இந்தப் போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.