ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் 2ஆவது தேசிய சம்மேளனம் டிசம்பர் 15 ஆம் திகதி கொழும்பில் இடம்பெறவுள்ளது.
கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் மிகவும் பிரமாண்டமான முறையில் நடைபெறவுள்ள குறித்த நிகழ்வில் கட்சியின் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளூராட்சி சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் இதில் பங்கேற்கவுள்ளனர்.
அதேவேளை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் கரம்கோர்த்து இந்த சம்மேளனத்தை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என மொட்டு கட்சி அறிவித்துள்ளது.
இந்நிகழ்வின் போது மொட்டு கட்சிக்கு புதிய தலைவர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் பொருட்டு பொதுஜன பெரமுனவின் அரசியல் நகர்வுகள் தற்போது இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.