அம்பாறை மாயாதுன்ன பகுதியில் துப்பாக்கி பிரயோகம் ; ஒருவர் பலி!

Share

அம்பாறை மாயாதுன்ன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று திங்கட்கிழமை (06) இரவு இடம் பெற்ற குறித்த துப்பாக்கி பிரயோகத்தில் 42 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் தனது வீட்டில் வீட்டின் பின்புறம் குளித்துக் கொண்டிருந்த போது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வயற் காணி தொடர்பாக ஏற்பட்ட தகராறே துப்பாக்கி பிரயோகத்திற்கு காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

மரணம் தொடர்பான நீதவான் விசாரணையைத் தொடர்ந்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவரை கைது செய்ய பண்டாரதுவ பொலிஸார் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு