பிரித்தானியாவில் வீடற்றவர்கள் கூடாரங்களைப் பயன்படுத்துவதைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் அமுல்படுத்தப்போவதாக பிரித்தானியாவின் உள்துறை அமைச்சர் சுயெல்லா பிரேவர்மேன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“பிரித்தானிய சாலைகளைக் கூடாரங்கள் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. கூடாரங்களில் வாழ்பவர்களில் பலர் வெளிநாட்டிலிருந்து வந்த குடியேற்றவாசிகள். இதனை அவர்கள் “ஒரு வாழ்க்கை முறை தேர்வாக” பார்க்கின்றார்கள்.
இது தொடர்பில் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், பிரித்தானியாவின் நகரங்கள் பலவீனமான கொள்கைகளால் குற்றம், போதைப்பொருள் பாவனை போன்றன அதிகமாக உள்ள அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ, லாஸ் ஏஞ்சல்ஸ் போன்று மாறிவிடும்.
சாலையில் தூங்க விரும்பாதவர்களுக்கு தெரிவுகள் இருப்பதாகவும் அத்தகையவர்களுக்கான ஆதரவை அதிகரிக்க அரசாங்கம் உள்ளூர் அரசாங்கத்துடன் இணைந்து செயல்படுவோம்.
கன்சர்வேடிவ் அரசாங்கத்தின் 13 ஆண்டு கால ஆட்சியில் வீடற்றவர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இது தோல்வியடைந்த அரசாங்கக் கொள்கையின் அடையாளம்“ என்றும் தெரிவித்தார்.