சீனத் தூதுவரின் வடக்கு விஜயம் ; தமிழ் காட்சிகள் எதிர்ப்பு

Share

சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் நாளை (06) ஆம் திகதி வடக்குக்கு விஜயம் செய்யவுள்ள நிலையில், அக் குழுவினருக்கு எதிராக வடக்கில் வலுவான எதிப்பலைகள் கிளம்பியுள்ளன.

தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் வல்லாதிக்கப் போட்டியின் காரணமாக இந்தியாவின் தலையீடுகளைக் குறைக்கும் நோக்கில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகின்றது எனக் குற்றம் சாட்டப்படுவதுடன். வடக்கு மீன்பிடித்துறையில் சீனாவின் ஆகிக்கம் அதிகரித்து வருகின்றமை பலத்த கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தமிழர்களின் பூர்வீகத் தாயகமான வடக்கு – கிழக்கு பகுதிகளில் சீனா வலிந்து ஆதிக்கம் செலுத்த முனைவது தமிழர்களில் வாழ்வாதாரத்துக்குப் பெரும் அச்சுறுத்தலாகும் என்று கடற்றொழிலாளர் சங்கங்கள் பகிரங்கமாகக் குற்றஞ்சாட்டி வருவதுடன், எதிர்வரும் திங்கட்கிழமை சீனத் தூதுவர் தலைமையிலான குழுவினர் வருகையின் போது தமது எதிர்ப்பை வெளிப்படுத்த ஆயத்தங்கள் செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், சீனத் தூதுவரின் யாழ். விஜயத்தை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் எதிர்ப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என அறியக் கிடைத்தது. சீனத் தூதுவர் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் 30 பேருக்கு மாதாந்தம் ரூபா 6.500 படி வழங் குவதற்குத் திட்டமிடப்பட்டிருந்த போதிலும், சீனத் தூதுவரிகள் யாழ்ப்பாணம் விஜயத்துக்கான நிகழ்ச்சி நிரலில் யாழ் பல்கலைக்கழக விஜயம் தவிர்க்கப்பட்டுள்ளதன் மூலம் இதுவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேநேரம், தமிழ்த் தேசியம் சார்ந்து செயற்படுகின்ற கட்சிகளும், சீனாவில் வல்வளைப்பு முயற்சிகள் மீதான தமது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் சீனாத் தூதுவரின் யாழ். விஜயத்தை விரும்பவில்லை.

தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரனும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் சட்டத்தரணியுமான க.சுகாசும் பூகோள ரீதியாக ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கான தீர்வு காண்பதற்கு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை இந்தியாவும் வெளிநாடுகளும் தலையிட்டு விரைவாக வழங்க வேண்டும் என்று சாரப்பட வற்புறுத்தியிருக்கின்றனர்.

இதனால் கட்சிகளின் ஆதரவாளர்களும் சீனத் தூதுவரின் யாழ்ப்பாண விஜயத்தன்று போர்கொடி தூக்கி எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட வாய்ப்புகள் உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு