திருகோணஸ்வரத்தில் ஆசி பெற்ற நிர்மலா சீதாராமன் State bank of India கிளையையும் திறந்துவைத்தார்

Share

இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று காலை திருகோணஸ்வரம் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபுட்டார்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் திருகோணஸ்வரம் ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலேயே இந்திய நிதி அமைச்சர் கலந்துகொண்டார்.

இதேவேளை, திருகோணமலையில் இந்திய அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தித் திட்டங்களையும் இந்திய நிதி அமைச்சர் பார்வையிட்டதுடன், திருகோணமலையில் உள்ள ஐ.ஓ.சி தலைமையகத்துக்கும் விஜயமொன்றை மேற்கொண்டார்.

திருகோணமலையில் State bank of india புதிய கிளை இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஆகியோரால் இன்று திறந்து வைக்கப்பட்டது.

வங்கியில் முதல் கணக்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடங்கியதுடன், அதற்காக passbook நிர்மலா சீதாராமனால் செந்தில் தொண்டமானிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு