கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாணத்திற்கு இன்று இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதா ராமன் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
திருகோணமலை விமான தளத்தில் நிர்மலா சீதா ராமனை ஆளுநர் செந்தில் தொண்டமான், பிரதம செயலாளர் R.M.P.S ரத்நாயக்க,ஆளுநர் செயலாளர் L.P மதநாயக்க, ஆளுநரின் பிரத்தியேக செயலாளர் L.L அணில் விஜயஶ்ரீ, அரச அதிபர் மற்றும் சுற்றுலா பணியக தவிசாளர் மதன் ஆகியோர் வரவேற்றனர்.
மேலும் ஆளுநரின் ஏற்பாட்டில் நிர்மலா சீதா ராமன் நாளை திருக்கோணேச்சரம் ஆலயத்தில் பூஜை வழிபாடுகளில் கலந்துகொள்வதுடன், இங்கு பல முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க உள்ளார்.