மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அதிகரிக்கும் அட்டூழியங்கள்- உயிரிழப்புகள்!

Share

“மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” எனவும் பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர்.

சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 47வது நாளாகவும் இன்றும்(01) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த பண்ணையாளர்கள்” ஜனாதிபதி தமக்கு வழங்கி உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. எமது மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கையெடுக்காத பொலிஸார் தமது கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்கள் அப்பகுதியில் பல்வேறு அட்டூழியங்களை செய்துவருகின்றனர். குறிப்பாக வாய்பேச முடியாத கால்நடைகளைக் கொடுமைப் படுத்தி வருகின்றனர். இதுவரையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் நாம் எமது தாம் வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றோம்” இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு