இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழுவினர், தமிழரசுக் கட்சியின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள சம்பந்தனின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்துகொண்டார்.
தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்ற தமிழ்த் தேசியப் பிரச்சினை, நில அபகரிப்புக்கள் மற்றும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இதுவரை இரத்துச் செய்யப்படாமல் இருப்பது போன்ற பல விடயங்கள் தொடர்பில் இதன்போது பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.