சுமணரட்ன தேரர் கைதாவாரா?

Share

அம்பிட்டிய சுமணரட்ன தேரரை உடனடியாக கைதுசெய்யுமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்றை கையளித்துள்ள வடக்குகிழக்கு மக்கள் போராட்டத்திற்கான ஆதரவு இயக்கத்தின் ராஜ்குமார் ராஜீவ்காந் தமிழ் மக்களை வெட்டிக்கொலை செய்யப்போவதாக தேரர் மிரட்டியமைக்கான வீடியோ ஆதாரத்தையும் கையளித்துள்ளார்.

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கான கடிதத்தில் ராஜ்குமார் ராஜீவ்காந் தெரிவித்துள்ளதாவது

அம்பிட்டிய சுமணரட்ன தேரர் எனும் மட்டக்களப்பில் வசிக்கும் ஒருவரின் நடவடிக்கைகள் குறித்து நான்உங்களின் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகின்றேன்.

இந்த நபர் தொடர்ச்சியாக இனவெறிப் போக்கான மனோநிலையை வெளிப்படுத்தி வருகின்றார்.மேலும் அவர், சமூகங்கள் மத்தியில் மோதலை தூண்டும் விதத்தில் தீவிரமாக செயற்பட்டுவருகின்றார்.

அவர் பல தடவைகள் பொலிஸாருக்கு எதிராக வன்முறையான விதத்தில் நடந்துகொண்டுள்ள போதிலும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

புதன்கிழமை அவர் பொலிஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் அவ்வேளை கொழும்பில் உள்ள தமிழர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்துவேன் என பகிரங்கமாக ஊடகங்களிற்கு தெரிவித்திருந்தார்.

இது அச்சமேற்படுத்தும் நடவடிக்கை -கொழும்பிலும் ஏனையபகுதிகளிலும் வாழும் தமிழர்களின் பாதுகாப்பிற்கான நேரடி அச்சுறுத்தல்

அம்பிட்டிய சுமண தேரருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களை கேட்டுக்கொள்கின்றேன். அவரது கோபத்தை தூண்டுகின்ற பேச்சுக்களுக்காகவும் வன்முறையை தூண்டுகின்ற விதத்திலான செயற்பாடுகளுக்காகவும் அவரை கைதுசெய்வது அவசியம்.

இவ்வாறான நடவடிக்கைகள் நாட்டின் பல்வேறுபட்ட சமூகத்தினர் மத்தியில்ஐக்கியம் சமாதானம் என்பவற்றிற்கு ஆபத்தை ஏற்படுத்தலாம் அதனை சகித்துக் கொள்ளக் கூடாது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு