இராணுவக் கட்டுப்பாட்டிலிருந்து 33 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட ஞான வைரவர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது.
குறித்த ஆலயமானது கடந்த 33 வருட காலமாக இராணுவ உயர் பாதுகாப்பு வலய பகுதிக்குள் இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் ஆலயத்தையும் அண்டிய சில பிரதேசங்களையும் இராணுவத்தினர் விடுவித்திருந்தனர்.
அதன் பின்னர் ஆலய புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் பூஜைகள் ஆரம்பமாகி, காலை 7.30 மணி தொடக்கம் 9.30 மணிவரையிலான சுப வேளையில் பாலஸ்தாபனம் இடம்பெற்றது.