நாடளாவிய ரீதியில் பொது சுகாதார பரிசோதகர்கள் ஒன்றிணைந்து அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று முதல் அமுலாகும் வகையில் முன்னெடுக்கப்பட உள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
பல்வேறு தொழில் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.