பதுளை – மொரஹெல பிரதான வீதியில் உல்பாத ஹண்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மீகஹகிவுலவில் இருந்து மொரஹெல நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளானது.
சுமார் 40 அடி உயரத்தில் இருந்து பள்ளத்துக்குள் கவிழ்ந்து பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில், வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 18 பேர் காயமடைந்துள்ளனர்.
விபத்துக்குள்ளானவர்கள் மீகஹகிவுல வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், ஆபத்தான நிலையில் உள்ள 8 பேர் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பதுளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.