இந்திய தொலைக்காட்சியில் அறிமுகமான மட்டக்களப்பு இளங்கலைஞர்!

Share

மட்டக்களப்பினை சேர்ந்த இளங் கலைஞர் ஒருவர் இந்திய தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை நாடகத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பினை பெற்று தனது திறமையினை வெளிப்படுத்தியுள்ளார்.

நடிகர், இயக்குனர், மற்றும் தொகுப்பாளர் என வலம் வரும் RJநெலு என பலராலும் அறியப்பட்ட இளைஞரே இவ்வாறு தனது திறமையினை வெளிப்படுத்தியுள்ளார். இவர் தென்னிந்திய முன்னணி தொலைக்காட்சியான சன் டிவியில் சிறந்த சின்னத்திரை இயக்குனர் என புகழ்பெற்ற திருச்செல்வம் அவர்களின் தொடர் நாடகமான “எதிர்நீச்சல்”இல் கிருஷ்ணசுவாமி மெய்யப்பன் (கிருஷ்ணா) என வில்லன் கதாபாத்திரத்தில் புதுமுகமாக களமிறங்கி முதல் பார்வையிலே மக்களை ஈர்த்துள்ளார்.

இவர் மட்டக்களப்பு மண்ணில் உருவாக்கப்பட்ட போடியார் , கலாட்டா பேரின்ப சுற்றுலா போன்ற திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் திறமையினை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு