மட்டு கல்லடி பகுதியில் பல்கலைக்கழக மாணவி தற்கொலை!

Share

மட்டக்களப்பு, கல்லடி நொச்சிமுனை பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்து, பல்கலைக்கழக கல்வியை தொடர்ந்து வந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இச் சம்பவம்  (19) இடம் பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தில் 2ஆம் வருடத்திற்கான பல்கலைக்கழக கல்வியினை தொடர்ந்து வந்த 22 வயதான மாணவியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இவர் மட்டக்களப்பு பழுகாமம் பகுதியை பூர்விகமாகக் கொண்டவர் எனவும், கண்டியில் குடும்பத்துடன் வசித்து வந்த நிலையில், பல்கலைக்கழக கல்வியை தொடர நொச்சிமுனையிலுள்ள சித்தியின் வீட்டில் தங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு