2023 உலகக் கிண்ணம்; நியூசிலாந்து அணி அபார வெற்றி

Share

உலகக் கிண்ண தொடரில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

289 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியினர் 139 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தனர்.

இதன் மூலம் நியூசிலாந்து அணி 149 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் மிட்செல் சான்ட்னர் மற்றும் லாக்கி பெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தனர்.

போட்டியின் ஆட்டநாயகனாக கிளென் பிலிப்ஸ் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியுடன் நியூசிலாந்து அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணி விளையாடிய நான்கு போட்டிகளிலும வெற்றிபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆப்கானிஸ்தான் அணிக்கு ‘289’ வெற்றி இலக்கு

2023 ஐசிசி கிரிக்கெட் உலகக் கிண்ண தொடரின் 16வது போட்டி நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே தற்சமயம் நடந்து வருகின்றது.

இந்தப் போட்டி சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுக்கு 288 ஓட்டங்களை பெற்றிருந்தது.

இப்போட்டியில் 289 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி உள்ளது. இந்த இலக்கு 200 ஓட்டங்களுக்கு குறைவாக இருந்திருக்கலாம்.

ஆப்கானிஸ்தான் அணி 4 எளிதான பிடியெடுப்புகளை கோட்டைவிட்டது. அதை நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்கள் சாதகமாக பயன்படுத்தி இந்த ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

மூன்று வீரர்கள் அரைசதம்

நியூசிலாந்து அணி சார்பில் கிளென் பிலிப்ஸ் 80 பந்துகளில் 71 ஓட்டங்களை எடுத்தார். டாம் லாதம் 74 பந்துகளில் 68 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர் வில் யங் 54 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

ஆப்கானிஸ்தான் அணி சார்பில் அஸ்மத்துல்லா உமர்சாய் மற்றும் நவின் உல் ஹக் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். ரஷித் கான் மற்றும் முஜீப் உர் ரஹ்மான் தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் காயம் காரணமாக இப்போட்டியில் விளையாட முடியவில்லை. அவருக்கு பதிலாக டாம் லாதம் தலைமைப் பொறுப்பை ஏற்றார்.

ஆப்கானிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்தை வீழ்த்தி பரபரப்பை ஏற்படுத்தியது.

மறுபுறம், 2023 உலகக் கோப்பையில் விளையாடிய மூன்று போட்டிகளிலும் நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இது நான்காவது போட்டியாகும்.

நியூசிலாந்து இன்னிங்ஸின் சிறப்பம்சங்கள்

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து மிகவும் எச்சரிக்கையுடன் விளையாடத் தொடங்கியது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான வில் யங் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் தொடக்க 6.3 ஓவரில் 30 ஓட்டங்களை சேர்த்தனர், பின்னர் டெவோன் கான்வே 20 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவர் முஜீப்-உர்-ரஹ்மானால் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார். முதல் நடுவர் ஆட்டமிழப்பு கொடுக்கவில்லை, அதனால் டிஆர்எஸ் எடுக்கப்பட்டது.

இதனையடுத்து முடிவை நடுவர் மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பின், ரச்சின் ரவீந்திரா களமிறங்கினார். யங் மற்றும் ரவீந்திரா இணைந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை 12 ஓவர்களில் 50 ஆக உயர்த்தினர்

இதன் பிறகு இருவரும் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர்களை தொடர்ந்து தாக்கினர். 18.1 ஓவர்களில் நியூசிலாந்தின் ஓட்ட எண்ணிக்கை 100ஐ கடந்தது.

ஆனால் இதன் பின்னர் வெறும் எட்டு பந்துகளில் மூன்று விக்கெட்டுகளை இழந்தனர். 21வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரச்சின் ரவீந்திரா (32) ஆட்டமிழந்தார்.

பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தில் மிகவும் வலுவாக இருந்த வில் யங் (54) விக்கெட் கீப்பர் இக்ராமிடம் பிடி கொடுத்து வெளியேறினார்.

இதன்பின், அடுத்த ஓவரை வீசிய ரஷித் கான், டேரில் மிட்செலை ஆட்டமிழக்கச் செய்தார்.

எனினும் பின்னர் ஜோடி சேர்ந்த கிளென் பிலிப்ஸ் மற்றும் டாம் லாதம் ஆகியோர் நிதான துடுப்பாட்டத்தை கடைபிடித்து ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர்.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு