சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட தமிழர் ஒருவர் போட்டியிடுகின்றார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மன்னார் – பறப்பாங்கண்டல் கிராமத்தைச் சேர்ந்தவரான சந்தியாப்பிள்ளை கெப்ரியேல் என்பவரே போட்டியிடுகின்றார்.
சந்தியாப்பிள்ளை கெப்ரியேல் 1989 ஆம் ஆண்டு முதல் 25 வருடங்களாக சுவிட்ஸர்லாந்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் கடமை புரிந்துள்ளார்.
பின்னர் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மொழி பெயர்ப்பாளராக 1990 ஆம் ஆண்டு முதல் கடமை புரிந்து வந்த நிலையில், 2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நகர சபை உறுப்பினராக செயற்பட்டு வருகின்றார்.
இந்நிலையில் தற்போது சுவிஸில் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக அவர் வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
குறித்த தேர்தலில் சந்தியாப்பிள்ளை கெப்ரியேல் வெற்றிபெறும் பட்சத்தில் சுவிஸ் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகும் முதல் தமிழர் என்ற பெருமையை பெறுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.