மலேசியாவில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இரண்டு இலங்கையர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோலாலம்பூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மலேசியா தலைநகர் கோலாலம்பூர் அருகில் செந்துல் என்ற பிரதேசத்தில் வீடொன்றில் கடந்த மாதம் 22 ஆம் திகதி மூன்று இலங்கையர்களின் உடலை மலேசிய பொலிஸார் கைப்பற்றினர்.
சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டின் உரிமையாளர்களான கணவன், மனைவியையும் பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கொலை செய்யப்பட்ட மூன்று பேரில் இநவர்கள் 20 வயதான மகனும் அடங்குவார்.
கொலை தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் இன்னும் முடிவடையவில்லை என்பதால், கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளது.