பாதுகாப்புப் படை வீரரை கடித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய்

Share

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் வளர்ப்பு நாய் கமாண்டர், ஜனாதிபதியின் பாதுகாப்புப் படை வீரரை கடித்து காயப்படுத்தியுள்ளது.

ஜெர்மன் ஷெப்பர்டு வகை நாயான கமாண்டர், வெள்ளை மாளிகை ஊழியரைக் கடித்திருக்கிரது.

இப்படி வெள்ளை மாளிகையில் உள்ள செல்லப்பிராணிகள் ஊழியர்களை கடிப்பது இது 11-ஆவது முறையாகும் என உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

கடிபட்ட ஊழியருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Joe biden with his pet
வெள்ளை மாளிகையின் சூழலுக்கு ஏற்ப கமாண்டரைப் பழக்கப்படுத்தி வருவதாக ஜோ பைடனின் மனைவி ஜில் பைடன் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஜனாதிபதியின் மற்றொரு நாயான மேஜர் வெள்ளை மாளிகையில் கடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டது.

இதையடுத்து அந்த நாய் வெளியேற்றப்பட்டு கமாண்டர் 2021 இல் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு