முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க விரைவில் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து பயணிப்பார் என சுதந்திரக் கட்சியின் உப தலைவரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாநாடு வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் சந்திரிக்கா அம்மையார் பங்கேற்காவிட்டாலும் 18 பிரதிநிதிகளை அவர் அனுப்பி வைத்திருந்தார்.
சுதந்திரக்கட்சி விரைவில் நல்ல நிலைக்கு வரும். சந்திரிக்கா அம்மையாரும் அப்போது கட்சியில் இணைவார்.
அதேபோல தயாசிறி ஜயசேகரவும் சுதந்திரக் கட்சியை விட்டுபோகக்கூடாது. அவர் கட்சியுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அழைப்பு விடுக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீண்டும் சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தால் அவருக்கு கட்சியின் முக்கிய பதவிகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.