தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டவுள்ள போராட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மக்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் மற்றும் பொதுமக்களால் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் ஒவ்வொரு பெளர்ணமி தினங்களிலும் நடைபெறும் இந்த போராட்டம் பெளர்ணமி தினமான இன்று (28.09.2023) மாலை 3.30 மணிக்கு ஆரம்பமாகி மறுநாள் 6 மணிக்கு நிறைவு பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனவே இதில் நாட்டிலுள்ள அனைத்து மக்களையும் கலந்து கொள்ளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.