புத்தளம் விமானப்படை முகாமில் வெடிப்பு; சிப்பாய் பலி!

Share

புத்தளம் – கற்பிட்டி கண்டல்குளி பகுதியில் உள்ள விமானப்படைத் தளத்தில்  இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் இளம் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

கற்பிட்டி – கண்டக்குளி பகுதியில் உள்ள இலங்கை விமானப்படை முகாமுக்கு சொந்தமான துப்பாக்கிச்சூடு பயிற்சி தளத்தில் துப்பாக்கி பயிற்சியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த போது குறித்த துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் மேற்படி இளம் விமானப்படை வீரர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், இந்த சம்பவத்தில் இன்னொரு விமானப்படை வீரர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு