தியாக தீபம் திலீபனின் 36ஆம் ஆண்டு நினைவேந்தல் வாரத்தின் இறுதி நாளின் பிரதான நிகழ்வுகள் சற்றுமுன் யாழ்ப்பாணம் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவாலயத்தில் ஆரம்பமாகியது.
அந்தவகையில், தியாக தீபம் திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர்நீத்த நேரமான காலை 10.48 மணிக்கு அவர் உண்ணாவிரதமிருந்த நல்லூரின் வீதியிலும், நினைவாலயத்திலிலும் சமநேரத்தில் மாவீரர்களின் பெற்றோரால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டதுடன் பொதுமக்களால் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வும் தற்போது இடம்பெற்று வருகின்றது.
குறிப்பாக தியாதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆரம்பமான நேரம் யாழில் கடும் மழை பொழிய ஆரம்பித்ததுடன் கடும் மழையினையும் பொருட்படுத்தாது பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் மக்கள் அணிதிரண்டு திலீபனுக்கு மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அதேவேளை திலீபனின் நினைவேந்தலை தழுவி இளைஞன் ஒருவன் தூக்குக்காவடி எடுத்து திலீபனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.