மாகாணதிற்குரிய அதிகாரம் மத்திக்கு செல்வதை அனுமதிக்க முடியாது

Share

மாகாணதிற்குரிய அதிகாரம் மத்திக்கு செல்வதை எந்த வகையிலும் அனுமதிக்க முடியாது என்றும் வடக்கு மாகாண ஆளுநர் அதற்கு உடந்தையாக இருக்கக் கூடாது என்றும் வட மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மத்திய அரசின் அதிகாரியாக இருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி மாகாண அதிகாரத்தை பயன்படுத்த முடியாது என்றும் விரும்பினால், மத்திய அரசின் பதவி நிலைகளை கைவிட்டுவிட்டு மாகாண அதிகாரத்தின் கீழ் பதவி வகிக்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

வடக்கு மாகாண ஆளுநர், மாகாண அதிகாரத்தை மத்திய அரசின் பிரதிநிதியாக இருக்கும் சத்தியமூர்த்திக்கு வழங்குவது தொடர்பில் சாதகமாக நிலைப்பாட்டை கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் சி.வி.கே. சிவஞானம் இதனை தெரிவித்துள்ளார்.

ஆகவே மாகாண அதிகாரத்தை மத்திக்கு விட்டுக்கொடும் நிலைப்பாட்டில் ஆளுநர் செயற்படுவார் என்றால் அதனை அவர் மீள் பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு