பிள்ளையானின் சொத்து விபரங்கள் குறித்து ஆராய வேண்டும்

Share

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சொத்துக்கள் விபரங்கள் குறித்து ஆராய வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதலின் சூத்திரதாரிகளை செனல் 4 வின் ஆவணப்படம் மிக தெளிவாக அடையாளப்படுத்தியதுடன் விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளி எனக்கூறி மக்களை ஏமாற்றி அரசியல் செய்பவர்களையும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழல், இலஞ்சம், கொலைகள், கொள்ளைகள், கடத்தல் போன்ற செயல்கள் மூலம் கோடிக்கணக்கான சொத்துக்களை சிவநேசதுரை சந்திரகாந்தனின் வைத்திருக்கின்றார் என பல்வேறு செய்திகள் வெளிவந்துள்ளன.

எனவே இவ்வாறாக சேகரித்த அனைத்து சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு  இவரால் பாதிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமெனவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் வலியுறுத்தியுளளார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு