இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) மீது பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு எதிராக இதுவரை எந்தவிதமான விசாரணைகளும் முன்னெடுக்கப்படாத நிலையில் எவ்வாறு இந்த அரசாங்கத்திடமிருந்து நியாயத்தை எதிர்பார்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.யான நளின் பண்டார கேள்வி எழுப்பினார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அரசாங்கம் உண்மையை வெளிப்படுத்த வேண்டியது அவசியம் என்றார்.
நேற்று உரையாற்றுகையில் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய“13” விவகாரத்தில் காலைவாரும் மொட்டு! – ரணிலுக்குச் சிக்கல் ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடன் சிவநேசதுரை சந்திரகாந்தன் விடுதலை செய்யப்பட்டார்.
கோட்டாவுக்கு ஆதரவாக செயற்பட்ட சுரேஷ் சலே புலனாய்வு பிரிவின் பிரதானியாக நியமிக்கப்பட்டார்.
தலதா மாளிகைக்கு குண்டுத் தாக்குதலை மேற்கொண்டவர், 600 பொலிஸாரை கொன்று குவித்தவர், திரிபோலி குழுவின் தலைவராக பதவி வகிப்பவர், இராஜாங்க அமைச்சராக பதவி வகிக்கும் போது ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதென்பது சந்தேகத்துக்குரியது.
திரிபோலி குழு தொடர்பில் நல்லாட்சி அரசாங்கத்தில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த குழுவின் தலைவருக்கு தற்போது இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது.
குண்டுத் தாக்குதல் சம்பவத்தை தொடர்புப்படுத்தி ‘சொனிக், சொனிக் ‘ என்ற வார்த்தை குறிப்பிடப்படுகிறது.
புலனாய்வு அதிகாரி ஒருவரையே சொனிக் என்று குறிப்பிட்டதாக கூறப்படுகின்றது. இந்த சொனிக் என்ற அதிகாரி தான் பொடி சஹ்ரானை சந்தித்து ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்ததாக குறிப்பிடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
தாக்குதலுக்கு மலேசியாவில் உள்ள அமைப்பு ஒன்று தான் ஐ.எஸ்.ஐ.எஸ்.அமைப்பு உரிமை கோரியதாக அறிவித்தது. தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி உள்ளது என்றார்.