பிள்ளையானின் கொலைப்பட்டியல் ஆதாரங்களுடன் மிக விரைவில்

Share

பிள்ளையானின் கொலை படரடியல் ஒன்றை ஆதாரங்களுடன் மிக விரைவில் அவரின் கொலைப்பட்டியல் ஒன்றை வெளியிடவுள்ளதாக ஈழவர் ஜனநாயக முன்னணியின் செயலாளர் நாயகம் இரா.பிரபா தெரிவித்தார்.

மட்டக்களப்பில்  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் என்பது தமது கதிரைகளை தக்கவைப்பதற்காக அப்பாவி மக்களை இலக்குவைத்த தாக்குதல் என்பது சர்வதேசம் மட்டுமல்ல இலங்கையில் உள்ள சாதாரண மக்களுக்கும் தெரியும்.

பிள்ளையான் சிறையில் இருக்கும்போது சஹ்ரானின் சகோதரனை சந்தித்தாகவும் அவர் ஐஎஸ்ஐஎஸ் என்று தனக்கு அன்று தெரியும் என்று கூறியுள்ளார்.

அன்று அவருக்கு இது தெரிந்திருந்தால் ஏன் அவர் அதனை உரிய பாதுகாப்பு தரப்பின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை.

எனது அம்மாவின் தங்கையின் மகன் கோவிந்தராஜன் என்பரை கடத்திச் சென்று படுகொலை செய்த வரைக்குமான அத்துடன் மாநகரசபை உறுப்பினராக நான் கடமையாற்றிய போது எனது பத்திரிகையாளராக இருந்தவரை கடத்திச் சென்று கொலை செய்தது வரையான பல கொலைகள் அடங்கிய பட்டிலை ஆதாரத்துடன் மிக விரைவில் வெளியிடுவேன்.

இன்று பிள்ளையான் தப்புவதற்காக கொஞ்சம் மக்களை ஏற்றிவந்து உங்களது காரியாலயத்திற்குள் வைத்துக் கொண்டு நீங்கள் சொல்வதை சொல்லிக் கொண்டு மக்களை ஆர்ப்பாட்டம் செய்யவைக்கின்றீர்கள்.

நீங்கள் நல்லவர்கள், குற்றமற்றவர்கள் என்றால் வட கிழக்கில் உள்ள மக்கள் வீதியிலிறங்கி சொல்ல வேண்டும் பிள்ளையான் நல்லவன், உத்தமன் என்று.நீங்கள் பஸ்களில் ஏற்றிவந்தவர்கள் அப்பாவி மக்கள், ஏதாவது கிடைக்கும் என்ற அவாவுடன் வந்தவர்கள்.

இந்த நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாதாரண தமிழ் மகனுக்கு பாதுகாப்பு இல்லையென்பது விளங்குகின்றது.

அதற்காக கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கஜேந்திரன் சொல்வதை சரியென்று சொல்லவரவில்லை. திலீபன் என்பவர் உலகத்திலேயே ஒரு உன்னதமான தியாகத்தினை செய்த மாமனிதன் தமிழ் மக்களுக்காகவும் இந்த மண்ணுக்காகவும் மரணத்தை எதிர்பார்த்திருந்து மரணித்த ஒரு மனிதன்.அந்த தியாகத்தினை உங்களது அரசியல் இலாபங்களுக்காக கொச்சைப்படுத்துகின்றீர்கள்.

இன்று வீதிவீதியாக அவரை கொண்டுதிரி கின்றீர்கள்.தியாகங்கள் மதிக்கப்படவேண்டும்.உங்கள் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்கு இனதுவேசத்தினை கக்கி மக்களை பிரிவுபடுத்தவர வேண்டாம் என தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு