யாழ். சுன்னாகம் பெட்ரோல் குண்டு தாக்குதல் – மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது

Share

யாழ். சுன்னாகம் – தாவடி பிரதேசத்தில் வீடொன்றிற்குள் புகுந்து பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் வீட்டில் இருந்த தாய், தந்தை, மகன் மற்றும் இரண்டு மகள்கள் தீக்காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

யாழ். சுன்னாகம் – தாவடி பிரதேசத்தில் முகமூடி அணிந்த நபர்களினால் இந்த பெட்ரோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

மோட்டார் சைக்கிள்களில் வந்து பிரதான வாயிலின் ஊடாக வீட்டுக்குள் பிரவேசித்தவர்கள் வீட்டுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியை தாக்கி சேதப்படுத்தியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, வீட்டின் மீது தாக்குதல் நடத்தி சேதப்படுத்தியதாகவும், வீட்டில் இருந்த 5 பேர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு