இலங்கைக்கும், இந்தியாவுக்கும் புதிய பொருளாதார கொள்கைகளை வகுக்கும் எரிக் சொல்ஹெய்ம்

Share

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் புதிய கொள்கைகளை வகுக்கும் செயல்பாட்டில் நோர்வே அரசின் முன்னாள் சர்வதேச அபிவிருத்தி அமைச்சரும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகருமான எரிக் சொல்ஹெய்ம் ஈடுபட்டுள்ளார்.

இலங்கையில் நோர்வே அரசின் அனுசரணையுடன் இடம்பெறும் அரசு – தமிழீழ விடுதலைப் புலிகள் இடையேயான சமாதானப் பேச்சுக்களில் சிறப்புத் தூதூவராக எரிக் சொல்ஹெய்ம் 2000ம் ஆண்டிலிருந்து 2006 வரை பணியாற்றி இருந்தார்.

இவர் தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்படுவாரென எதிர்பார்க்கப்படும் ராகுல் காந்திக்கு இந்தியாவின் எதிர்கால பொருளாதார கொள்கைகளை வகுத்துக்கொடுக்கும் பணியையும் ஏற்றுள்ளார்.

வட ஐரோப்பாவில் உள்ள பனிமலைகள் அதிகம் கொண்ட சுற்றுலாவிற்கு புகழ் பெற்ற நாடு, நோர்வே (Norway). இதன் தலைநகரம் ஓஸ்லோ (Oslo).

இந்நாட்டின் முன்னாள் அரசியல்வாதியும், இராஜதந்திரியுமான 68 வயதான எரிக் சொல்ஹெய்ம் (Erik Solheim), முன்னாள் ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் திட்டங்களின் செயல் இயக்குனராக பதவி வகித்தவர்.

இவர், பருவநிலையின் மாற்றங்கள் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கங்கள் குறித்து உலக நாடுகள் செயலாற்ற வேண்டியது குறித்து தனது கருத்துக்களை உலகெங்கும் கூறி வருகிறார்.

கடந்த ஜூன் மாதம், இந்தியாவின் அதிக மக்கள் தொகையின் காரணமாக இயற்கை வளங்களை அளவுக்கதிகமாக பயன்படுத்த நேரிடும் என்றும் இதனால் இந்தியாவில் காடுகள் அழியும் நிலை அதிகரிக்கலாம் எனவும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, நேற்று தனது ஐரோப்பிய சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக நோர்வே சென்றார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் அக்கட்சி தெரிவித்துள்ளதாவது,

ராகுல் காந்தி, நோர்வே நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்களான எர்னா ஸோல்பர்க் (Erna Solberg) மற்றும் ஸ்வெர் மிர்லி (Sverre Myrli) ஆகியோருடன் நார்வே நாட்டின் முன்னாள் பிரதமர் ஆகியோரையும் சந்தித்தார். அந்த சந்திப்பு ஆக்கபூர்வமாக இருந்தது.

நோர்வே சென்ற ராகுல், எரிக் சொல்ஹெய்மையும் அங்கு சந்தித்தார்.

இது குறித்து எரிக் சொல்ஹெய்ம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் கணக்கில் பதிவு செய்திருப்பதாவது,

நவீன இந்தியாவில் முதலீடு செய்ய விரும்பும் முன்னணி வணிக தலைவர்களுடன் ஒரு சிறப்பான சந்திப்பு நடந்தது. இதில் இந்தியாவின் முக்கிய எதிர்கட்சியான காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல், இந்தியாவிற்கான தனது எதிர்கால திட்டங்கள் குறித்தும், அடுத்த வருடம் அந்நாட்டில் நடைபெறவிருக்கும் தேர்தல் பின்னணியில் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்தும் அவரது கருத்துக்களை வெளியிட்டதாக எரிக் கூறினார்.

இதேவேளை, எதிர்கால இந்தியாவுக்கான சில பொருளாதார கொள்கைகளுக்கான ஆலோசனைகளை எதிர்காலத்தில் வழங்குமாறு எரிக் சொல்ஹெய்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு