‘பிரபாகரனின் மகள் துவாரகா’; தமிழக முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றது யார்?

Share

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மறைந்த வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் எனக் கூறப்படும் பெண்ணும் அவரது கணவர் தயாபர ராஜ் ஆகியோர் இராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் பாதுகாப்பில் இருந்தவர்கள் சட்டவிரோத படகில் இரகசியமாக இலங்கைக்கு தப்பிச் சென்றதாக DT Next செய்தி வெளியிட்டுள்ளது.

தென் கொரியரும் பல்கேரியரும் அரச அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்பிச் சென்ற பின்னர், ஒரு காலத்தில் விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவின் ஒரு பகுதியாக இருந்ததாக நம்பப்படும் தம்பதியர் மண்டபம் முகாமில் இருந்து இலங்கைக்கு தப்பிச் சென்றதை தமிழக அதிகாரிகள் அறிந்து கொண்டுள்ளனர்.

மேலும், தப்பியோடிய பெண்ணை, கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகாவாக சித்தரிக்கும் காணொளி இலங்கையில் சமூக வலைதளங்களில் வெளியான பின்னரே , தமிழக பொலிஸ் அதிகாரிகளுக்கு தம்பதியினர் தப்பியோடியது தெரியவந்துள்ளது.

தயாபர ராஜ் மற்றும் அவரது மனைவி உதயகலா என அடையாளம் காணப்பட்ட இலங்கை தம்பதியினர் தமிழ்நாட்டு அகதிகள் முகாமில் இருந்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு திருச்சி சிறப்பு முகாமில் இருந்த தயாபர ராஜ், இராமநாதபுரம் மண்டபத்தில் உள்ள சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தனது குடும்பத்தினரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாகக் கூறி காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்தார்.

அவரது கோரிக்கையைத் தொடர்ந்து, சர்வதேச பொலிஸாரால் தேடப்பட்டு வரும் தயாபர ராஜை 24×7 பாதுகாப்பு இல்லாமல் மண்டபம் முகாமுக்கு மாற்றுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை அமர்வு அரசுக்கு உத்தரவிட்டது.

“இருவரும் வருவாய்த் துறையின் கண்காணிப்பில் மண்டபத்தில் இருக்க வேண்டும். ஆனால் உதயகலாவின் காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அந்த காணொயில் அவர் மறைந்த விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் மகள் துவாரகா என வர்ணிக்கப்பட்டிருந்தது. இலங்கை வந்துள்ள அவர் ஒரு அரசியல் கட்சியைத் தொடங்கியிருப்பதும் அறிந்துகொள்ள முடிந்துள்ளதாக DT Next வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தம்பதியினர் தங்களது மூன்று குழந்தைகளுடன் மண்டபம் முகாமில் இருந்து சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டவிரோத படகு மூலம் தங்கள் சொந்த ஊருக்கு இரகசியமாக புறப்பட்டுச் சென்றதாக செய்தி அறிக்கை தெரிவிக்கிறது.

இலங்கையில், உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்த பின்னர், இலங்கைப் படைகளின் பிடியில் இருக்கும் உறவினர்களை விடுவிப்பதாக உறுதியளித்து இருவரும் இலங்கையில் உள்ள உள்ளூர் தமிழர்களிடம் பெரும் பணம் மோசடி செய்துள்ளதாக DT Next வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு