நாட்டின் மோசடியான அரசியல்வாதிகள் காரணமாக முழு நாடும் அழிந்து வருகிறது என இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் பேராயர் வணக்கத்திற்குரிய கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பமுனுகம உஸ்வெட்டகொய்யாவ புனித மரியாள் தேவாலயத்தில் நடைபெற்ற பொன்விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எமது நாட்டில் ஒரு சட்டமில்லை. இரண்டு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
சாதாரண பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு ஒரு சட்டமும் பொலிஸ் அத்தியட்சகர் போன்ற உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு இன்னுமொரு சட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது.
வழக்கொன்றில் குற்றவாளி ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டால், அதனை செலுத்தும் வரை அவரை விளக்கமறியிலில் வைத்திருப்பார்கள்.
எனினும் சில அரசியல்வாதிகள் குற்றவாளிகள் என அறிவிக்கப்படும் போது, அவர்கள் சுதந்திரமான சென்று அபராத பணத்தை தேட தேவையான காலத்தை வழங்குகின்றனர்.
பாராதூரமான குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கும் உயர் பொலிஸ் அதிகாரிகள் எந்த தடைகளும் இன்றி அந்த பதவிகளை வகித்து வருகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளாக நாட்டின் அநீதி அரசாண்டு வருகிறது.
உங்களை போலவே உங்கள் அயலாரை நேசிக்க வேண்டும் என்று கிறிஸ்தவ சமயம் கூறுகிறது.
இதனடிப்படையில் ஈஸ்டர் தாக்குதலில் உயிர்களை இழந்த 273 பேரின் துயரங்களை நாம் உணர வேண்டும்.
எனினும் சில கத்தோலிக்க பக்தர்கள் அது எமது பங்கில் நடக்கவில்லை என்று கூறி அந்த பயங்கரமான அனர்த்தம் பற்றி கவனத்தில் கொள்ளாமல் இருக்கின்றனர்.
எந்த உணர்வுமில்லை. இது எமது சமயத்தின் படிப்பினைகளுக்கு எதிரானது. அத்துடன் மிகப் பெரிய சாபம் எனவும் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை மேலும் தெரிவித்துள்ளார்.