ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், தாக்கல் செய்யப்பட்டு தற்போது தீர்ப்பளிக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான நகர்த்தல் பத்திர விசாரணைக்கு உயர் நீதிமன்றம் திகதியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் நவம்பர் மாதம் குறித்த நகர்த்தல் பத்திரம் மீதான விசாரணைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்ற நீதியரசர் புவனேக அலுவிஹாரே தலைமையிலான 6 பேர் அடங்கிய நீதியரசர் குழாம் முன்னிலையில் இந்த வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக நீதிமன்றத்துக்கான எமது செய்தியாளர் தெரிவித்தார்.
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆகியோர் குறித்த மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தர உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு, தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நட்டஈடு வழங்குமாறு கடந்த ஜனவரி 12ம் திகதி, ஏழு பேர் கொண்ட உயர் நீதிமன்ற நீதியர்கள் ஆயம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.