காலியாகி வரும் பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க கூடாராம்

Share

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தொழிற்சங்க தலைவர்களில் பலர் தற்போது பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா உள்ளிட்டோர் தலைமையிலான புதிய அரசியல் கூட்டணியில் இணைய ஆரம்பித்துள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

பொதுஜன பெரமுனவில் சுமார் 100 தொழிற்சங்கங்கள் அங்கம் வகிக்கின்றன. இவற்றில் சுமார் 25 தொழிற்சங்கங்களின் தலைவர்கள் புதிய அரசியல் கூட்டணியின் தலைவர் அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் நிமல் லன்சா ஆகியோரை சந்தித்து அந்த கூட்டணியில் இணைந்துள்ளனர்.

பொதுஜன பெரமுனவின் முன்பள்ளி ஆசிரியர் சங்கத்தின் தலைவர் அசங்க ஸ்ரீநான் அண்மையில் புதிய அரசியல் கூட்டணியில் இணைந்துக்கொண்டார்.

அவர் பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் ஜனாதிபதியின் ஒருங்கிணைப்புச் செயலாளராக நேற்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

 

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு