இலங்கையில் RSS அமைப்பின் இந்து அடிப்படைவாதம் பரவி வருவதாக குற்றச்சாட்டு

Share

இலங்கை முழுவதும் இந்தியாவின் Rashtriya Swayamsevak Sangh (RSS)அமைப்பின் இந்து அடிப்படைவாதம் பரவி வருவதாக பாராம்பரிய இந்துக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்து அறநெறி பாடசாலைகள், நலன்புரி வேலைத்திட்டங்கள்,உதவிகளை பகிர்ந்தளிப்பது உட்பட பல்வேறு செயற்பாடுகள் மூலம் பாராம்பரிய இந்துக்களை அந்த அடிப்படைவாதத்திற்கு தூண்டப்படுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

இரத்தினபுரி இறக்குவானை ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலில் அண்மையில் நடைபெற்ற இவ்வாறான நிகழ்ச்சி ஒன்றுக்கு அங்குள்ள பாரம்பரிய இந்துக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவின் Rashtriya Swayamsevak Sangh (RSS) அமைப்பு இலங்கையில் இந்து அடிப்படைவாதம் பரவ உதவி வருவதாக பாரம்பரிய இந்துக்கள் கூறியுள்ளனர்.

RSS என்பது இந்தியாவின் வலதுசாரி இந்து தேசியவாத,இராணுவ, தொண்டு மற்றும் போராட்ட அமைப்பு என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த 1925 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட RSS அமைப்பின் அடிப்படை நோக்கம் இந்து சமூகத்தை ஒன்றிணைப்பது மற்றும் இந்து ஒழுக்கத்தை ஏற்படுத்துவதாகும்.

ஐரோப்பிய பாசிச அமைப்புகள் மற்றும் இத்தாலியின் பாசிச கட்சி போன்ற அணிகளால் ஈர்க்கப்பட்டு, RSS அமைப்பின் இந்திய கலாசாரம் மற்றும் அதன் நாகரீகத்தின் பெறுமதியை பாதுகாப்பதற்காக செயற்பட்டு வருகிறது.

அத்துடன் RSS அமைப்பின் முஸ்லிம் விரோத செயற்பாடுகள் தொடர்பிலும் பல முறை குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவின் தற்போதைய ஆளும் கட்சியின் ஆதரவை பெற்றுள்ள RSS அமைப்பின் உறுப்பினர்களின் எண்ணிக்கைக்கு அமைய அந்த அமைப்பு உலகில் உள்ள மிகப் பெரிய வலதுசாரி அமைப்பு என கருதப்படுகிறது.

5 முதல் 6 மில்லியன் உறுப்பினர்களை கொண்டுள்ள இந்த அமைப்புக்கு இந்தியா உட்பட உலகம் முழுவதும் 56 ஆயிரத்து 859 கிளைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு