வடமராட்சி விபத்தில் 14 வயது சிறுவன் பலி! – இளைஞர் ஒருவர் படுகாயம்

Share

யாழ்., வடமராட்சி, கொற்றாவத்தைப் பகுதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதுண்ட விபத்தில் 14 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளார். அத்துடன் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

கரணவாய் வடமேற்கு, கொற்றாவத்தை – கணபதி மில்லுக்கு அருகாமையில் இன்று பிற்பகல் விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் கொற்றாவத்தைப் பகுதியைச் சேர்ந்த சாகித்தியன் (வயது 14) எனும் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அப்பகுதியைச் சேர்ந்த அஜந்தன் (வயது 21) என்பவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளும் டிப்பரும் வளைவுப் பகுதியில் திரும்பியபோது இரண்டு வாகனங்களும் நேருக்கு நேர் மோதியது.

இதில் மோட்டார் சையிக்கிளில் பயணித்த இருவரும் தூக்கி வீசப்பட்டதோடு, மோட்டார் சைக்கிள் டிப்பர் வாகனத்தினுள் சிக்குண்டு தீப் பிடித்து எரிந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

https://youtu.be/L7XXbz0imOA

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு