நானுஓயா விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயம்!

Share

நானுஓயாவில் கப் ரக வாகனமொன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் 6 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கொழும்பு – பிலியந்தலையிலிருந்து நுவரெலியா நகருக்குப் பயணித்த குறித்த கப் ரக வாகனம் கிரிமிட்டி பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் அனைவரும் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் விபத்து இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு