தோட்ட நிர்வாகம் அராஜகம்! – தற்காலிக குடியிருப்பை உடைத்தெறிந்த உதவி முகாமையாளர்

Share

மாத்தளை, எல்கடுவ பிளான்டேசனுக்கு உட்பட்ட ரத்வத்த கீழ்பிரிவில் லயன் குடியிருப்பில் இருந்த மக்களின் தற்காலிக வீடுகளை அந்தத் தோட்டத்தின் உதவி முகாமையாளர் அடித்து உடைக்கும் வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த குடியிருப்பில் இருந்த மூன்று குடும்பங்கள் உள்ளடங்களாக 14 பேர் ஒரே லயன் அறையில் தொடர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், தமக்கு வீடொன்றையோ, வீடமைக்கக் காணித் துண்டொன்றையோ வழங்குமாறு பல வருடங்களாக பல தோட்ட முகாமையாளர்களிடம் இக்குடும்பத்தினர் கேட்டு வந்துள்ளனர்.

அவ்வகையில் தற்போதுள்ள முகாமையாளருக்கு முன்பிருந்தவர், ஒரு இடத்தைக் காட்டி இங்கு வீடமைத்துக்கொள்ளுங்கள் என அனுமதி வழங்கிய நிலையில், குறித்த குடும்பத்தினர் வாழை மரம் உள்ளிட்ட சில பயிர்களையும் அவ்விடத்தில் நாட்டியதுடன், ஒரு கிழமைக்கு முன் அவ்விடத்தில் தற்காலிக குடியிருப்பொன்றை அமைத்துள்ளனர்.

இதன்போது சம்பவ இடத்துக்கு நேற்று (19) தனது அதிகாரிகள் சகிதம் சென்ற உதவி முகாமையாளர், அந்தக்  குடியிருப்பை உடைத்து பொருட்களுக்கும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

உதவி முகாமையாளர் உட்பட இரு அதிகாரிகள் இணைந்து வீட்டை உடைத்துப் பொருட்களைச் சேதம் செய்யும் காணொளி சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டுள்ளது.

மேலும் அந்த உதவி முகாமையாளரின் அடாவடித்தனம் குறித்து உரிய அதிகாரிகளுக்குப் பாதிக்கப்பட்ட மக்கள் அறிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

Related Posts

Like us on Facebook

விளம்பரம்

முகப்பு
செய்திகள்
விளம்பரம்
இரங்கல்
தொடர்பு