யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கோர விபத்தில் கணவன் சம்பவ இடத்திலேயே சாவடைந்துள்ளார். மனைவி படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளும் தண்ணீர் தாங்கி வாகனமும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் – ஏ 9 பிரதான வீதியின் செம்மணி வளைவுக்கு அண்மையில் இன்று நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் கொக்குவில் கிழக்கு, பொற்பதி வீதியைச் சேர்ந்த புவனேஸ்வரன் மனோஜ் (வயது – 31) என்ற குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மன்னாரைச் சேர்ந்த அவரது மனைவி துரைராஜ் முகுந்தினி (வயது -26) படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.